காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் ஆரம்ப பள்ளிக்கு மருத்துவ உபகரணம் !!!


வேலூர் அடுத்த காட்பாடி ஜங்ஷன் அலையன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆக்ஸிலியம் தொடக்கப் பள்ளிக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அலையன்ஸ் சங்க தலைவர் சுமதி ரத்தினம் தலைமை தாங்கினார் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார் சிறப்பு அழைப்பாளராக தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பழனி கலந்துகொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார்
சங்க ஆலோசகர் ஜி ரத்தினம் பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் காட்பாடி   காந்திநகர்                அக்சிலியம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை மேரிநிர்மல்ரோஸ் சிறப்புரையாற்றினர்.
நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, இன்ஜினியர் ரத்தினம் மற்றும் எவர் கிரீன் என்டர்பிரைசஸ் உரிமையாளர் யுவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை வழங்கினர். 
காட்பாடி ஜங்ஷன் அலையன்ஸ் சங்க சார்பில் பள்ளிக்கு தேவையான முதலுதவி உபகரண பெட்டகம், மற்றம் குப்பைகள் கொட்டும் தொட்டிகள், ஆகியவற்றை தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர்(பொ) பழனி வழங்க பள்ளி தலைமையாசிரியை மேரிநிர்மல்ரோஸ் பெற்றுக்கொண்டார்.
இறுதியில் அக்சிலியம் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்