வேலூரில் இலங்கை அகதிகள் குடியிருப்பை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சிமஸ்தான் !!!
வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு நிரந்தர இலவச குடியிருப்பை தமிழ்நாடு அரசு கட்டிமுடித்து உள்ளது.இன்னும் 5 சதவீத பணிநிறைவு பெறாமல் உள்ளது.
அதனை சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான்குடியிருப்பை ஆய்வு செய்து அந்த இலங்கைவாழ் தமிழர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
திமுக மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமமூர்த்தி, மாவட்ட ஊரக திட்ட இயக்குநர் ஆர்த்தி. மற்றும் வருவாய்துறையினர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment