வேலூரில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் !!!
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் தக்காளி, பருப்பு, இஞ்சி மற்றும் அத்தியாவாசிய உணவு பொருள்களின் விலை உயர்வை கண்டித்து வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது.
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வேலூர் மாவட்டமைய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன், பகுதி செயலாளர்கள் ஜனார்தனன், நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சீனிவாசன், வேலூர் மாநகர அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் பிரம்மபுரம் பிரகாஷம், வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், எழிலரசன், மகளிர் அணியினர், முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மேடையில் முக்கிய நிர்வாகிகள் தக்காளி, வெங்காயம், பீன்ஸ், இஞ்சியால் ஆன மாலை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முடிவில் வட்ட செயலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.
Comments
Post a Comment