வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்கவிழா !!!
வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் கல்லூரி பேரவைத் தொடக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவியர்கள் வரவேற்பு விழா ஆகியவை நேற்று காலை 10 மணி அளவில் இறைவணக்கத்துடன் தொடங்கியது. கல்லூரி செயலாளர் டி.மணிநாதன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் . முனைவர் இரா.பானுமதி வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட உயர்கல்வி கல்லூரி இணை இயக்குனர் ஜி.எழிலன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு வாழ்த்து கூறினார். மாணவிகள் பேரவை தலைமை மற்றும் பிற குழுக்கள் தங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கான மாணவியர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார். அதன் பின் அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தங்கள் பொறுப்பை உணர்ந்த மாணவிகள் திறம்பட செயல்படுவோம் என்ற அடிப்படையில் உறுதி மொழியை ஏற்றனர். இப்பேரவைத் தொடக்க விழா நிகழ்ச்சிகளை கல்லூரி பேரவை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.
அடையாளமாக
முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நன்றி நவிலல் நடைபெற்றது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள்
கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment