வேலூர் அதிமுக செயலாளர் அப்பு மனு!!!
வேலூரில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி கொடியை பயன் படுத்தகூடாது !
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு தலைமையில் வேலூர் எஸ்பி மணிவண்ணனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அதிமுக இயக்கத்துக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது அதிமுக பொதுச்செயலாளரும் சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியநிலையில் அவர்கள் வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் நடத்தும் கூட்டங்களில் அதிமுக கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.
உடன் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் இருந்தனர்.
Comments
Post a Comment