வேலூர் கோட்டை மத்திய தொல்லியல்துறை சார்பில் விழிப்புணர்வு !!!
வேலூரில் மத்திய தொல்லியல்துறை சார்பில் விழிப்புணர்வு !!
வேலூர் கோட்டையில் உள்ள இந்திய தொல்லியல்துறை சார்பில் இந்திய சுதந்திர அமுத பெருவிழா முன்னிட்டு கலை, பண்பாடு, ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் தொன்மையான சின்னங்களை பாதுகாப்பதன் மூலம் நமது வரலாற்றை அறியமுடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் வேலூர் கோட்டை புல்வெளி மைதானத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை எம்எல்ஏ கார்த்திகேயன் துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், மேயர் சுஜாதா, தொல்லியல்துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து, மத்திய கலை மற்றும் பண்பாட்டு அமைச்சக சிறப்பு அதிகாரி அங்குஜ், வருமானவரித்துறை துணை ஆணையர் விஷ்ணுபிரசாத், வேலூர் கோட்டை முதுநிலை பராமரிப்பு அதிகாரி அகல்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.
Comments
Post a Comment