காட்பாடி அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் !!?
வேலூர் மாநகரம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை கல்வி திருமதி மு.அங்குலட்சுமி அவர்கள் மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கோ சரளா உதவி தலைமை ஆசிரியர் எம் மாரிமுத்து தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு அரசின் அரசுத்தேர்வுகள் துறையால் 08.052023 அன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன 12.05.2023 அன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன 31.07.2023 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment