காட்பாடி பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது.
அந்த இடத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழிற்முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் டிஆர்பி.ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
உடன் தமிழ்நாடு தொழிற்முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரவல்லி, வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா இளங்கோ உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Comments
Post a Comment