காட்பாடி அடுத்த கிங்ஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் விளையாட்டுவிழா !!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள கசம் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒலிம்பிக் தீபத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கசம் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா ஒலிம்பிக் தீபத்துடன் கொண்டாடப்பட்டது .சுதந்திர தின விழாவை முன்னிட்டு இறை வணக்கத்துடன் ஆர்இவி.  பால்சன் தொடங்கி வைத்தார்.  பள்ளி முதல்வர் பென்னி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வி. ஏசுதாஸ் முன்னிலையில், டாக்டர் எம். ஆர். ரெட்டி தலைமையேற்று ஒலிம்பிக் தீபத்தை சேர்க்காடு கூட்டுரோட்டில் தொடங்கி வைத்தார். இதை அடுத்து இந்த ஒலிம்பிக் ஜோதியுடன் மாணவ, மாணவிகள் நடை தொடர் ஓட்டமாக ஓடி வந்து முடிவில் எம்பி கே ஜி பண்ணையின் இயக்குநர் கிருபாகர  டேனியலிடம் ஒலிம்பிக் தீபத்தை  ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு கிங்ஸ் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஓட்டத்தை தொடர்ந்து இந்த ஒலிம்பிக் ஜோதியை வைத்து பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழாவுடன் பள்ளியின் விளையாட்டு விழாவையும் இனிதே நடத்தி முடித்தனர் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர். இதில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்