காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் !!!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து அந்த சிறப்பு அபிஷேகத்தில் இளநீர், பால், பழம், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அடங்கிய பொருட்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் , மகாதீபாரதனை நடந்தது. இதையடுத்து ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஶ்ரீபக்த ஆஞ்சநேயரை தரிசித்தனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பட்டாச்சாரியார் ஸ்ரீரங்கம் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment