காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் !!!
வேலூர் அடுத்த காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 77வது சுதந்திர தினவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் கோ.சரளா தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார்.
மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். ஜுனியர் ரெட்கிராஸ், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய பசுமைப்படை, மாணவர் காவல் படை, உள்ளிட்ட பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
மாமன்ற உறுப்பினர் சித்ரா லோகநாதன் லட்டுகளை மாணவிகளுக்கு வழங்கினர். கலைநிகழ்சிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கும் கபாடி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகளை மாமன்ற உறுப்பினர் சித்ரா மகேந்திரன் வழங்கினார்.
முன்னதாக உடற்கல்வி ஆசிரியை எஸ்.புவனா வரவேற்று பேசினார். உதவித்தலைமையாசிரியர்கள் க.திருமொழி, ரோசலின் பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியை நிவேதிதா சுதந்திர தின உரையாற்றினார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.தாமஸ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் எஸ்.விமலா, கட்டிட குழுஉறுப்பினர்கள் லோகநாதன், மகேந்திரன் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இசை ஆசிரியை ஜெ.செலின், பாட்டு நடன நிகழ்சிகை ஒருங்கிணைத்தனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியை கௌசல்யா நன்றி கூறினார்.
Comments
Post a Comment