காட்பாடியில் வரும் 17-ம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி சிறப்பாக கொண்டாட முடிவு !
'
வேலூர்அடுத்த காட்பாடியில் வேலூர் மாவட்ட அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மட்டும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் வரும் 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு காட்பாடியில் காளிகாம்பாள் பூஜை விஸ்வகர்மா ஜெயந்தி சிறப்பாக கொண்டாடவும் அருகிலுள்ள மண்டபத்தில் அன்னதானம் செய்யவும் மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராகதேசிய செயலாளர் சின்னைய்யா
ஆச்சாரிஜெகதீசன் அழைத்து விழாவை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.மணிதலைமை தாங்கினார்.துணைத் தலைவர் பி. நாகராஜ் முன்னிலை வகித்தார்.செயல் தலைவர் பி. மாதவன்,மகளிர் அணி மாவட்ட தலைவி எம். சுகுணா துணை தலைவி ஆர்.சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் இ.யுவராணி நன்றி கூறினார்.
Comments
Post a Comment