காட்பாடியில் பா.ம.க.சார்பில் 36 -வது வீரவணக்க நாள் !!!
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் வீரமணம் அடைந்த 21 பேரின் புகைப்படத்திற்கு காட்பாடியில் 36 -வது ஆண்டு நினைவு நாளில் மலர்தூவி அஞ்சலி !!!
தமிழகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய தொடர் சாலைமறியல் நடந்தது.
அதில் 21-பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் 36 -வது நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பகுதியில் மரணம் அடைந்த 21-பேரின் புகைபடங்கள் அடங்கி பிளாக்ஸ் பேனர் முன் பா.ம.க.வினர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
நிகழ்ச்சிக்கு பா.ம.க.மாவட்ட துணைசெயலாளர் துளசிராமன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் என். டி.சண்முகம், கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைசெயலாளர் கே.ஜி.குமரன், மேற்கு ஒன்றியதலைவர் முனிசாமி, பிரகாஷ், மகளிர் அணி ஜெனிமா பிரியதர்ஷிணி, வன்னியர் சங்கம் பள்ளிகுப்பம் கோவிந்தராஜ், உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி காட்பாடி தொகுதி, வன்னியர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். முடிவில் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் தேவாநன்றி கூறினார்.
Comments
Post a Comment