வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் அதிரடி !!!
காட்பாடி அருகே அதிரடி மீண்டும் ஆந்திராவிற்கு கடத்த இருந்த 710 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் !!!
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த தெங்கால் (பார்டர்) கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 23மூட்டை 710 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஜீப் டிரைவர் உதவியுடன் பறிமுதல் செய்து திருவலம் நுகர்பொருள் உணவு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு பொன்னை அடுத்த கீரை சாத்து பஸ் நிறுத்தத்தில் 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment