காட்பாடியில் ஸ்ரீவிஸ்வகர்மா ஜெயந்தி விழா !!!
வேலூர் அடுத்த காட்பாடியில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா கூட்டமைப்பு சார்பில் குருவிஸ்வகர்மா ஜெயந்தி விழா !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அகிலஇந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு வேலூர் மாவட்ட கிளை சார்பில்தேவலோக சிற்பி குருவிஸ்வகர்மா ஜெயந்தி விழா முன்னிட்டு காளி கம்மாள் பூஜை மற்றும் விஸ்வகர்மாவிற்கு கலச பூஜை மற்றும் விசேஷ பூஜை நடந்தது.
இதில் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஆச்சாரி, வேலூர் மாவட்ட தலைவர் மணி ஆச்சாரி செயல் தலைவர் மாதவன் ஆச்சாரி, துணைத்தலைவர் நாகராஜ் ஆச்சாரி, மகளிர் அணி யுவராணி மற்றும் சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு பேனா நோட்டு வழங்கப்பட்டு பின் அன்னதானம் செய்யப்பட்டது.
முடிவில் மாவட்ட மகளிர் அணிசெயலாளர் சுகுணா நன்றி கூறினார்.
Comments
Post a Comment