தமிழ்நாடு ஏ.ஐ.வி.எப்.பின் மாநில இளைஞரணி தலைவர் தேர்வு !!!
தேசிய செயலாளர் சான்றிதழ் வழங்கினார்.
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் (ஏ.ஐ.வி.எப்) பொதுக்குழுகூட்டம் நடந்தது.
இதில் தமிழ்நாடு மாநில இளைஞர் அணி தலைவராக எம்.கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டடு அதற்கான சான்றிதழ் ஏ.ஐ.வி.எப். தேசிய செயலாளர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன், வழங்கினார்.
அமைப்பு செயலாளர் மாதவன் ஆச்சாரி, மாவட்ட மகளிர் அணி தலைவி சுகுணா, மாவட்ட செயலாளர் யுவராணி, மாவட்ட துணைத் தலைவி சுகன்யா ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.
Comments
Post a Comment