. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்.முகாம் துவக்கவிழா !
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகரம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அமைவு சார்பில் சிறப்பு முகாம் தொடக்க விழா வேலூர் மாநகராட்சி காட்பாடி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார் ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியை டி.என்.ஷோபா ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னதாக திட்ட அலுவலர் உ.சுதா வரவேற்றார்.
வேலூர் மாநகராட்சியின் துணைமேயர் எம்.சுனில்குமார் துவக்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் சமூக சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்வது பாராட்டுவதற்கு உரியது உங்களுடைய பணிகளை நான் பாராட்டுகின்றேன் அதே வேளையில் கல்விதான் உங்களை முன்னேற்றம் அடையச் செய்யும் எனவே இந்த முகாம் பணிகளுக்குப் பிறகு நீங்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தினமும் படிக்க வேண்டும் உங்களை உயர்த்திக் கொள்வதற்கு நீங்கள் நல்ல முறையில் கல்வி பெற்று சிறப்பாக இடம் பெற வேண்டும் என வாழ்த்தினார்.
வேலூர் மாநகராட்சியின் 1வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சித்ராலோகநாதன், சித்ராமகேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் விமலா, பள்ளி கட்டிட குழு உறுப்பினர் லோகநாதன், ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் எஸ் சச்சிதானந்தம் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் கௌதமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தூய்மை பணி, உழவாரப்பணி, பள்ளி வளாகம் தூய்மை செய்தல், மரக்கன்றுநடுதல், மனித நேயம் மிக்கவர்களாக சமூக நலனில் அக்கரை கொண்டவர்களாக மாற்ற இன்றைய முகாம் பணிகள் அமைந்தன. காலை 8.30 மணிமுதல் பகல் 12.30 மணி வரை உடலுழைப்பு களப்பணி செய்தனர். தினமும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை கருத்தரங்குகள் நடைபெறுகிறது.
பின்னர் துணை மேயர் எம் சுனில் குமார் ஒண்ணாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் ஆகியோர் களப்பணிகளை துவக்கி வைத்தனர்
Comments
Post a Comment