ஆந்திரா திருப்பதியில் சந்திரபாபு நாயுடு கைது.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபுவை எஸ்.ஐ.டி மற்றும் சிஐடி அதிகாரிகள் கைது செய்ததாக தகவல் . 241 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றச்சாட்டு
நந்தியால் ரேஞ்ச் டிஐஜி ரகுராமி ரெட்டி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தலைமையிலான போலீஸார், அவரைக் கைது செய்ய இன்று அதிகாலை 3 மணியளவில் நகரத்தில் உள்ள ஆர்.கே. ஃபங்ஷன் ஹாலில் உள்ள நாயுடுவின் முகாமுக்குச் சென்றனர். அப்போது அவர் தனது கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
எனினும், அங்கு ஏராளமானோர் திரண்டிருந்த தெலுங்கு தேசம் கட்சியினர் போலீசார் அங்கு செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு படையினர் கூட, விதிகளின்படி அதிகாலை 5.30 மணி வரை நாயுடுவை சந்திக்க யாரையும் அனுமதிக்க முடியாது என்று கூறி போலீஸாரை அனுமதிக்கவில்லை.
இதனால் காலை ஆறு மணி வரை காத்திருந்த போலீசார், அவர் தங்கியிருந்த கேரவனின் கதவுகளைத் தட்டி, அவரை கீழே இறக்கி கைது செய்தனர்.
ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழக ஊழலில் அவர் கைது செய்யப்படுவதாக டிஐஜி அவரிடம் தெரிவித்தார் இந்த வழக்கில் அவர் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கான நோட்டீஸ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Comments
Post a Comment