வேலூரில் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை !!!

கே.வி.குப்பம், அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு அகிய புதியதாக ஏற்படுத்தப்பட்ட வட்டங்களில் சார்நிலை கருவூலம், சார்பு நீதிமன்றங்கள், ஏற்படுத்த அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை


பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த வேண்டும், ஒப்பந்த ஊதியம், ஒட்டுமொத்த ஊதிய முறைக்களை இரத்து செய்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40வது ஆண்டு மாணிக்க விழா  முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்க கல்வெட்டு திறந்து வைத்து கொடியினை ஏற்றியும் பேரணியுஙட துவங்கியது.  மாவட்ட பிரதிநிதித்துவ பேரவைக்கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. 
இந்த நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ட்டி.டி.ஜோஷி தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் அ.சேகர் அறிமுக உரையாற்றினார்.  மாவட்ட துணைத்தலைவர் எம்.எஸ்.தீனதயாளன் வரவேற்று பேசினார். 
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளத்தின் தேசிய செயற்குழு உறப்பினர் மற்றம் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் கல்வெட்டு திறந்து வைத்து கொடியினை ஏற்றி வைத்து பேசினார்.   இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பேரணியை துவக்கிவைத்து பேசினார்.
பேரணியானது வேலூர் மாவட்ட ஆட்சியர் அலவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு ஆற்காடு புறவழி சாலை வழியாக அரசு ஊழியர் சங்க மாவட்ட அலவலகத்தினை அடைந்தது அங்கு மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டமும் சங்கத்தின் 40ஆவது ஆண்டு மாணிக்க விழாவும் நடைபெற்றது.  
மாவட்ட செயலாளர் அ.சேகர் வேலை அறிகையினையும் மாவட்ட பொருளாளர் சு.சுமதி நிதி நிலை அறிக்கையினையும் சமர்பித்து பேசினர்.
மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.எஸ்.தீனதயாளன், பா.வேலு, க.பாமுருகன், பி.ஜீவநாதன் , மாவட்ட இணை செயலாளர்கள் செ.செபாஸ்டியன்,, டி.ராஜ்குமார், அமல்ராஜ், எம்.ஏழமலை ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறை படுத்திட வேண்டும்
தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த ஊதிய முறைகளை இரத்து செய்து அனைவரும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்
வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம், அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு அகிய புதியதாக ஏற்படுத்தப்பட்ட வட்டங்களில் சார்நிலை கருவூலம், சார்பு நீதிமன்றங்கள், ஏற்படுத்த வேண்டும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வர வசதியாக காட்பாடி- சத்துவாச்சாரி இடையே அலுவலக நேரங்களில் நேரடி நகர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மாநகராட்சிக்கான மாநகர ஈட்டுபடி, வீட்டு வாடகை படி வழங்கிட வேண்டும்  உள்ளிட்ட 13அம்ச கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிர் துணைக்குழு ஜெ.மகேஸ்வரி, தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.சீனிவாசன், தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் மா.சினேகலதா ஆகியோர்ல வாழ்த்தி பேசினர்.  மாநிலச்செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைஉரையாற்றினார்.  மாவட்ட இணைச்செயலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்