காட்பாடியில் கொசு புழுக்களை ஒழிக்க ஆயில்பந்து வீச்சு !!!
காட்பாடி பகுதியில் தேங்கிய தண்ணீரில் கொசு புழுக்களை ஒழிக்க ஆயில் பந்துவீசு !
வேலூர் மாநகராட்சி கமிஷ்னர் இரத்தினசாமி உத்தரவுப்படி மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் காட்பாடி பகுதியில் 15 வார்டுகளில் மழை காரணத்தினால் காலிபிளாட்டுகளில் தேங்கி உள்ள நீரில் கொசு புழுக்கள் இனபெருக்கத்தை தடுக்க ஆயில்பந்து (பால்) போடுவதால் தேங்கிய நீரில் எண்ணெய் படலம் நீரில் படர்ந்து கொசுப்புழுக்கள் சுவாசிக்க மேலே வரும்போது சுவாசிக்க முடியாமல் இறந்தி விடும்.
கோணி பையில் மரத்தூள் உருண்டையாக கட்டி வேஸ்ட் ஆயிலில் 24 மணிநேரம் ஊறவைத்து தேங்கிய மழைநீரில் போடவேண்டும், இதனால் கொசு புழுக்கள் இறந்துவிடும். பொதுமக்களும் உங்கள் வீட்டு அருகே மழைநீர் தேங்கி இருந்தால் இதேப்போல நீங்களும் செய்யலாம்,
குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களில் கொசு புகாதவண்ணம் மூடிவைத்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று சுகாதார அலுவலர் சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment