வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இலவச பொது மருத்துவ முகாமை துவக்கிய ஏ.சி.சண்முகம் !!!
மக்களை தேடி மருத்துவர்கள்
ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இலவச மருத்துவ முகாமை துவக்கிவைத்த ஏ.சி.எஸ்.
சென்னை ஏ. சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் அண்ணா, நரேந்திர மோடி, ஏ. சி.சண்முகம் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் (வேலூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிகள்) இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர்சத்துவாச்சாரி செங்குந்தர் திருமண மண்டபத்தில் புதிய நீதிக்கட்சி தலைவரும் ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி வேந்தருமான ஏ. சி.சண்முகம் குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.
முகாம் துவக்கவிழாவில் புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ரவிக்குமார், கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள். செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment