ஆசிய விளையாட்டு பாய்மரப்படகு போட்டியில் வேலூர் வீரர் விஷ்ணுக்கு வெண்கலம் !!
சீனாவில்நடை பெறும் ஆசிய விளையாட்டு போட்டி பாய்மரப்படகு போட்டியில் வேலூர் வீரர் விஷ்ணுவுக்கு வெண்கல பதக்கம் !!!
சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் பாய்மரப்படகு போட்டியில் தமிழக வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை அடுத்த சலமநத்தம் கிராமத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன்(23) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் பெற்றார்.
விஷ்ணு தற்போக பெங்களுருவில் உள்ள மெட்ராஸ் இஞ்சினியரிங் க்ரூப் (எம்ஈஜி) இராணுவ பிரிவில் சுபேதாராக உள்ளார்.
இவரது தந்தை சரவணனும் இந்த இராணுவ பிரிவில் பெங்களூரில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். இவர்தான் தனது மகனுக்கு பயிற்சி அளித்து உள்ளார். இவரும் பயிற்சியாளரே.
விஷ்ணுவுக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
Comments
Post a Comment