VELLORE HEADLINES - ONLINE வேலூர் மாநகராட்சி திமுக உடன்பிறப்பு கவுன்சிலர்கள் அடி - தடி!!
வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலருக்கு கும்மாங்குத்துவிட்ட மற்றொரு திமுக கவுன்சிலர் !!
வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் முருகன் (30-வது வார்டு), சுதாகர் (24-வது வார்டு) இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து உள்ளது.
இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் சுதாகர் நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது முருகன் அங்குள்ள ஓட்டலில் உட்கார்ந்து கொடுக்கல், வாங்கல் குறித்து காரசார விவாதம் நடந்தது.
அப்போது ஆத்திரம் அடைந்த முருகன், மற்றொரு கவுன்சிலர் சுதாகரை கும்மாங்குத்துவிட்டார்.
அதன் பிறகு தன்னுடைய ரவுடிகள் 10 பேரை வரவழைத்து வெளுத்துவாங்கினார். 2 குழுவினரும் மோதிக்கொண்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சுதாகர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முருகனும் தன்னை தாக்கியதாக அவரும் அட்மிட் ஆனார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து உள்ளதாக தெரிகின்றது. தற்போது காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து (2 பேரும் திமுகவினர் என்பதால்) செய்துவருவதாக கூறப்படுகிறது?
இந்த தாக்குதல் வீடியோ (சிசிடிவி கேமரா) தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்களின் கும்மாங்குத்து! வேலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment