வேலூர் ஹெட்லைன் - தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் 22-வது மாவட்ட மாநாடு !!!
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்க வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட 22-வது மாநாடு காட்பாடியில் நடந்தது !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட 22-வது மாநாடு நடந்தது.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார்.
செயலாளர் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளாராக இதன் நிறுவனத் தலைவர் பி.சகிலன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
எம்.டி.தணிகவேல்,மாநில தலைவர் வீரமுத்து, செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் கோவர்த்தனன், வேலூர் துணை மேயர் சுனில்குமார், மாவட்ட துணைத்தலைவர் கே.வி.குப்பம் லோகநாதன், காட்பாடி தாலுகா தலைவர் புகழ்வேந்தன், செயலாளர் காசிராஜ், பொருளாளர் பாண்டியன் மற்றும் வேலூர் மற்றும் திருப்பத்தூர் பகுதி கேபிள் ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment