காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !!!
வேலூர் அடுத்த, காட்பாடி காந்தி நகர் , அக்சிலியம் கல்லூரியில் 63ம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர்.பேராசிரியர். டி.ஆறுமுகம் பங்கேற்று 344 இளங்கலை மாணவிகள், 251 முதுகலை மாணவிகள், 23 ஆய்வியல் நிறைஞர் ஆகியோருக்குப் பட்டமளித்தார்.
இவ்விழாவில் கல்லூரிச் செயலாளர் முனைவர் அருட்சகோ. மேரி ஜோஸ்பின் ராணி முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோ. ரா.ஜெயசாந்தி வரவேற்புரையாற்றினார். தேர்வாணையர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அருட்சகோ. அ.ஆரோக்கிய ஜெயசீலி, துணை முதல்வர்கள் முனைவர் அருட்சகோ. அ.அமலா வளர்மதி (சுழற்சி) அருட்சகோ. ஜூலியானா அக்னஸ் விக்டர் (சுழற்சி II),, அனைத்துத் துறைத் தலைவர்களும் மற்றும் பேராசிரிய பெருமக்களும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இப்பட்டமளிப்பு விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளும், மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment