வேலூர் மாவட்ட வி.ஏ.ஓ.சங்க துணைத்தலைவர் அன்பரசன் கலந்துகொண்ட ஆயுதபூஜை!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆயுதப் பூஜை முன்னிட்டு சுவாமி படங்கள் மற்றும் கணக்கு பதிவேடுகளுக்கு பூஜை போடப்பட்டது.
இதில் வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க துணைத்தலைவர் அன்பரசன் கலந்துகொண்டார். திமுக ஒன்றிய கவுன்சிலர் பிரபு, திமுக பிரமுகர் அசோகன், வார்டு உறுப்பினர் ரவி, உதவியாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல் வஞ்சூர் மற்றும் டி.கே.புரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த ஆயுதபூஜையில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், உதவியாளர்கள் ரவி, மனோகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment