VELLOREHEADLINES- online - பெங்களுருக்கு ரயிலில் கடந்த முயன்ற 1100 கிலோ ரேசன் அரிசி காட்பாடியில் பறிமுதல் !!!
வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி, வேலூர் பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஏ.சி.விநாயகமூர்த்தி மேற்பார்வையில், அவரது குழுவினர் திவாகர் தலைமையிலான குழுவினர் சென்னை டூ பெங்களூரு செல்லும் லால்பாக் அதிவிரைவு ரயில் வண்டியில் சோதனை செய்தனர். இதில் 1100 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி பெங்களூருக்கு கடத்தப்படுவதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ரயிலில் இருக்கைகளுக்கு கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். பின்னர் அரிசி மூட்டைகளை வேலூர் உணவு பொருள் பாதுகாப்பு வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய கடத்தல் காரர்கள் தப்பியோடி விட்டனர்.
Comments
Post a Comment