VELLOREHEADLINES (online) காட்பாடி ஆக்சீலியம் பெண்கள் கல்லூரியில் 64-வது பட்டமளிப்பு விழா !!!
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஆக்சீலியம் பெண்கள் கல்லூரியில் 64வது பட்டமளிப்பு விழா நடந்தது .
விழாவில் சிறப்பு விருந்தினராக வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஜி.வி. செல்வம் கலந்து கொண்டு 942 இளங்கலை மாணவிகளுக்கும், 216 முதுகலை மாணவிகளுக்கும், 8 ஆய்வியல் நிறைஞர் பயின்ற மாணவியர்களுக்கும் பட்டம் வழங்கி சிறப்பித்தார். முனைவர் அருட்சகோதரி மேரி ஜோஸ்பின் ராணி முன்னிலை வகித்தார். முனைவர் அருட்சகோதரி ரா. ஜெய சாந்தி வரவேற்றார் .முனைவர் அருட் சகோதரி ஆரோக்கிய ஜெயசீலி தேர்வாணையர் மற்றும் தமிழ் துறை தலைவர் முனைவர் அருட் சகோதரி அமலா வளர்மதி துணை முதல்வர் (சுழற்சி 1), அருட் சகோதரி ஜூலியானா அக்னஸ் விக்டர், துணை முதல்வர் (சுழற்சி 2), மற்றும் அனைத்து துறை தலைவர்களும், பேராசிரியர்களும், பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment