VELLOREHEADLINES (online) காட்பாடியில் Ex - BSF சங்க மாநில பொதுக்கூட்டம் !
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பி.எஸ்.எப்.கேண்டீன் வளாகத்தில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) வீரர் நலசங்கம் சார்பில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மத்திய, மாநில அரசு சலுகைகளை வழங்க வேண்டும்.
ஓய்வுக்கு பின் மறுவேலைவாய்ப்பு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், பிள்ளைகளுக்கு கல்வியில் இடஒதுக்கீடு மற்றும் அரசு இடத்தில் கேண்டீன் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் மாநில தலைவர் எஸ்.கே.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment