VELLOREHEADLINES - online பேர்ணாம்பட்டு காப்பு காட்டில் தேங்கிய நீரில்ஆனந்த குளியல் போட்ட யானை !!!
பேரணாம்பட்டு அருகே தொடர் மழையால் காப்புக்காட்டில் நீர் தேக்கு பள்ளத்தில் ஆனந்த குளியல் போடும் காட்டு யானை.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமம் அருகே மோர்தனா விரிவு காப்பு காட்டில் வனவிலங்குகளுக்காக வனத்துறையினர் பல இடங்களில் நீர்த்தேக்கம் பள்ளம் அமைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பேரணாம்பட்டு வனத்துறையினர் வனவிலங்குக்கு அமைக்கப்பட்ட நீர் தேக்கு பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன.
வனவிலங்குகள் அந்த தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்ட நீர் தேக்கு பள்ளத்தில் தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ள அந்த பள்ளத்தில் காட்டு யானை ஆனந்த குளியலுக்கு வருகிறது.
காப்புக்காட்டு பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் இதனால் மனிதர் விலங்குகள் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment