VELLOREHEADLINES (online) காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளியில் கிராமசபா கூட்டம் !!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விண்ணம்பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
விண்ணம்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஹாலட்சுமி முரளி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அர்ச்சனா ரவி மற்றும் ஊராட்சி செயலர் பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கௌசல்யா கலந்து கொண்டார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது .மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் ஊரகம் ஜல்ஜீவன் இயக்கம் ,பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் உட்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments
Post a Comment