VELLOREHEADLINES - (online) காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் கிராமசபை கூட்டம் !!
காட்பாடி ஊராட்சி ஒன்றியம், சேர்க்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பத்மநாபன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனிதா முன்னிலை வகித்தார். செயலாளர் ஜானகிராமன், பற்றாளர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பித்தனர். கிராம சபை கூட்டத்தில் தற்போது கொசுக்களால் பரவி வரும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது, வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது, தெருவிளக்குகளை பழுது நீக்கி தருவது மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்குவது மற்றும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் குறைவில்லாமல் செய்து கொடுப்பது, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது .இதற்காக அடுத்த நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. க
Comments
Post a Comment