VELLOREHEADLINES -online வேலூரில் மத்திய பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.!!!
வேலூர் மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை 10 தலை இராவணன் போல் சித்தரித்து பிஜேபி படத்தை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் சித்ரஞ்சன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர காங்.கமிட்டி தலைவர் டீக்காராமன் கலந்துகொண்டார்.
சிறுபான்மை பிரிவுவாகித் பாஷா, மாவட்ட துணைத்தலைவர் திவாகர், ஒன்றிய செயலாளர் இளங்கோ. மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், எஸ். சி.பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment