VELLOREHEADLINES (online) வேலூர் கொணவட்டம் அரசு பஸ் டெப்போ எதிரில் பா.ம.க.தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !!
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் அரசு போக்குவரத்து கழகம் கொணவட்டம் டெப்போவில் பா.ம.க.தொழிற் சங்கம் சார்பில் சங்க கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெப்போ வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் மண்டல பொதுச்செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
வேலூர் மாவட்ட பா.ம.க. தலைவர் பி.கே.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.துளசிராமன், மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் எஸ்.தேவா மற்றும் டெப்போ தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
வேலூர் மண்டல பொருளாளர் சி.டோஜோ நன்றி கூறினார்.
Comments
Post a Comment