காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் !!
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 2-நாட்களாக யாகசாலை பூஜை, கலசபூஜை நடைபெற்றது.
பின்பு கலச புறப்பாடு, கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு ஸ்ரீரங்கநாதர் தாயார் திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தேறியது.
ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கும்பாபிஷேகத்தின் பின்பு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை ஸ்ரீபக்த ஆஞ்நேயசபாவினர் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment