VELLOREHEADLINES - குடியாத்தம் அருகே முறைகேடாக பயன்படுத்திய 64 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் !!!
முறைகேடாக பயன்படுத்திய 64 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் !!!
வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் குடியாத்தம் வட்டவழங்கல் அலுவலர் வெங்கடேஷ், நுகர்வோர் ஆய்வாளர் ஜோதிராமலிங்கம், உதவியாளர் திவாகர் மற்றும் குழுவினர் குடியாத்தத்தில் 46, பரதராமியில் 18 என 64 என கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ரோட்டில் உள்ள செல்வகணபதி இண்டேன் கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைத்தனர்.
இந்த சிலிண்டர்கள் வீட்டு உபயோகித்திற்கு வழங்கப்பட்டதை முறைகேடாக ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments
Post a Comment