VELLOREHEADLINES - காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ அருகே குப்பை & கூளங்கள் அதிரடி அகற்றம் !!!
சமூக ஆர்வலர் நோபல் கோரிக்கை ஏற்று காட்பாடி தொன்போஸ்கோ பள்ளி அருகில் குப்பைகளை அதிரடியாக அகற்றிய வேலூர் மாநகராட்சி சுகாதார துறை !!!
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் காந்திநகரில் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, நர்சரி பள்ளி அருகில் அம்மா உணவகம் எதிரில் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் குப்பை கூளங்கள், கழிவுகளை கொட்டிவருதால் சுகாதார சீர்கேடு, பள்ளி மாணவர்கள் படும் அவதி, அம்மா உணவகத்திற்கு வந்து சாப்பிடுவர்கள் முகம் சுளிந்து வந்தனர்.
அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் நோபல்லிவிங்ஸ்டன் இதுகுறித்த தகவலை வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமாரிடம் தெரிவித்தார்.
சிவக்குமாரின் ஆலோசனைப் படி சுகாதார மேற்பார்வையாளர் டேவிட் பார்வையில் சுகாதார பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பை கழிவுகளை அகற்றினார்கள்.
Comments
Post a Comment