வேலூர் ஹெட்லைன்ஸ் - வேலூர், காட்பாடிக்கு கலைஞரின் பேனா வருகை !!
காட்பாடிக்கு வந்த முத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளித்த திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மற்றும் துணை மேயர் சுனில்குமார் !!!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு பகுதியாக பேனா வடிவில் முத்தமிழ் தேர் எனும் பெயரில் வாகனம் தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டு உள்ளது.
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வந்த முத்தமிழ் தேரை வேலூர் திமுக எம்.பி.கதிர் அனந்த், துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகர திமுக துணை செயலாளர் தேவநேசன், திமுக மாமன்ற கவுன்சிலர்கள் அன்பு, சித்ரா, சீனி வாசன், டீட்டா சரவணன், வட்ட செயலாளர்கள் லோகநாதன், விநாயகம் உள்ளிட்ட பலர் வரவேற்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
கட்சியினர், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்,
Comments
Post a Comment