வேலூர்ஹெட்லைன் : வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம் !!
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023 - 24 பருவ ஆண்டிற்கான கருப்பு அரவையை துவக்கி வைத்த அமைச்சர்கள் !!
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை காட்பாடி அடுத்த அம்முண்டியில் இயங்கிவருகிறது.
இந்த வருடத்திற்கான 2023 - 24 பருவ கரும்பு அரவை வியாழக்கிழமை துவங்கியது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கரும்பு அரவையை துவக்கிவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரப்பன், அமுலு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் நர்மதா, கோட்டாச்சியர் கவிதா, துணை மேயர் சுனில்குமார், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், பெருமாள், சர்க்கரை ஆலை சிசிஓ வேலாயுதம், அலுவலக மேலாளர் சசிகலா, தொழிலாளர் நல அலுவலர் சிங்காரவேலன், தெ.மு.ச.தலைவர் மதன், ஆலை பணியாளர்கள், தொழிலாளர்கள், கரும்பு விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment