வேலூர்ஹெட்லைன் : வேலூர் வெங்கடாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் !!!

வேலூர் அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

ஊராட்சி மன்ற தலைவர் பாபு பங்கேற்பு!!


, வேலூர் தாலுகா, வெங்கடாபுரம் ஊராட்சி, புது வசூர் கே.ஜி.என். தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கோயம்பத்தூரில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் வெங்கடாபுரம் ஊராட்சியிலும் மக்களுடன் முதல்வர் திட்டம் வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் தலைமையில் தொடங்கியது.  மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இ.பாபு, ஊராட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பட்டா மாறுதல் ,பட்டா உட்பிரிவு, இணைய வழிபட்டா, நில அளவீடு (அத்து காண்பித்தல்) ,வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ,வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மற்றும் இதர சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பதிநான்கு துறைக்கான சேவை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்