வேலூர் ஹெட்லைன் : கடத்த இருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்த பறக்கும் படை வட்டாட்சியர் !!
வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் உதவியாளர்கள் காட்பாடி தாலுகா பொன்னை பரமசாத்து கிராமத்தில் சாலையோர பதுக்கிவைத்து இருந்த 555 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இந்த ரேசன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்தது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
Comments
Post a Comment