VELLOREHEADLINES - காட்பாடி தொன்போஸ்கோவில் கிருஸ்மஸ் இசை விழா பரிசளிப்பு !!!

காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கிருஸ்துமஸ் இசை உலா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு !!! 

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஸ்துமஸ் இசை உலா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் அருட்தந்தை அருள் சேகர் தலைமை தாங்கினார்.
இல்ல தந்தை சுந்தர் பிரான்சிஸ் துவக்க ஜெப உரை மற்றும் வரவேற்பு யாற்றினார்.
அருட்தந்தைகள் பால்ராஜ், லூக்காஸ் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான டி. நோபல்லிவிங்ஸ்டன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
சிறந்த பாடல்களை பாடிய முதல் பரிசை தொன் போஸ்கோமேல்நிலைப்பள்ளியும், 2-வது பரிசை ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், 3-வது பரிசினை விருதம்பட்டில் உள்ள ஐடாஸ் பள்ளி மற்றும் திருப்பத்தூர் டான்பாஸ்கோ பள்ளியும் பரிசு பெற்றனர்.
ஏற்பாடுகளை பிரேமா, பலவேந்திரன், ராஜ்சேகர், டான்போஸ்கோ இளைஞர் மன்ற தலைவர் பெருமாள் குழுவினர் மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்