VELLOREHEADLINES : வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் 48 -வது ஜெயந்தி விழா !!
வேலூர் ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவின் 48-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் !!
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சக்தி அம்மாவின் 48-வது ஜெயந்தியை முன்னிட்டு கோயிலில் கடந்த 15 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
கடந்த 3-ம் தேதி நடந்த விழாவில் சக்தி அம்மாவுக்கு வண்ண மலர்களால் மலர் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜார்கண்ட் மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தங்க கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி, தங்க கோயில் அறங்காவலர் செளந்திரராஜன், ஸ்ரீ நாராயணி பீடம் மேலாளர் சம்பத் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள், மாநில, உள்ளூர் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment