VELLOREHEADLINES: காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் & மெட்டுக்குளத்தில் கிராம சபா கூட்டம் !!
காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல், மெட்டுக்குளம் ஆகியவற்றில் கிராம சபா கூட்டம் தலைவர்கள் ராகேஷ், அனிதா ஆகியோர் தலைமையில் நடந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரத்தில் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் தலைமையிலும் மெட்டுக்குளம் பகுதியில் அதன் பஞ்சாயத்து தலைவர் அனிதா இளங்கோ தலைமையிலும் குடியரசு தின விழா கிராமசபா கூட்டம் நடந்தது.
மெட்டுக்குளம் ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments
Post a Comment