VELLOREHEADLINES : வேலூர் பறக்கும் படை குழுவினர் அதிரடி !!
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் உத்தரவுப்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த 2023-ஜனவரி முதல் டிசம்பர் வரை வேலூர் பறக்கும்படைதனி தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் குழுவினர் பஸ் நிலையம், தனியார் பஸ்கள் ரயில்நிலையங்கள், தனியாக வீடுகளில் பதுக்கிவைத்து ஆந்திரா, கர்நாடக மாநிலத்திற்கு கடத்த இருந்தரேசன் பொருள்களான (1,46,470 கிலோ) பருப்பு (220 கிலோ), சிலிண்டர் (217 உருளை), கோதுமை (30 கிலோ), சர்க்கரை (25 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டு அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் உணவு பொருள்களின் அரசு மதிப்பு ரூ. 8 லட்சத்து 35 ஆயிரத்து 6 ஆகும்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 66 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது சம்மந்தமாக 107 பேர் கைது செய்யப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment