VELLOREHEADLINE: காட்பாடிகாந்திநகர் ஆக்கீலியம் பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு !!
வேலூரில் புத்தக கண்காட்சி குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு செய்த மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் !!
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அரசின் மாபெரும்புத்தக கண்காட்சி வரும் 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் சுப்புலட்சுமி , அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி வேலூர் மாநகராட்சி 1- வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், காட்பாடி காந்திநகர் ஆக்சீலியம் பெண்கள் பள்ளிமைதானத்தில் ஆக்சீலியம் பெண்கள் பள்ளியை சேர்ந்த சுமார் 1500 மாணவிகள் மற்றும் 55 ஆசிரியைகளுக்கு புத்தக கண்காட்சியால் ஏற்படும் பயன்கள் குறித்தும் எடுத்து கூறினார்.
உடன் பள்ளி ஆசிரியைகள், மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.
Comments
Post a Comment