VELLOREHEADLINE: கே.வி.குப்பத்தில் புதிய நீதிக்கட்சி சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் !!
வேலூர் மாவட்டம் கே. வி.குப்பத்தில் புதிய நீதிக்கட்சிசார்பில் நாளை தனியார் மாபெரும் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் !!
வேலூர் பாராளுமன்ற தொகுதியான கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொன்னாங்குப்பம் வித்யலட்சுமி தனியார் மேல்நிலைப் பள்ளியில் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் மற்றும் 10 மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு புகழ்மிக்க தனியார் கம்பெனியில் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு மற்றும் பணி ஆணை வழங்கப்படவுள்ளது. இந்த ஏ. சி.எஸ். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க புகைப்படம், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் நகல், பயோ-டேட்டா ஆகியவற்றை கொண்டு வரும் படி சென்னை ஏ. சி.எஸ். கல்வி நிறுவன வேலை வாய்ப்பு பயிற்சி துறை மற்றும் நிர்வாகத் துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். முடிவில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பணி நியமன ஆணை வழங்குவார்.
Comments
Post a Comment