VELLOREHEADLINE : வேலூர் தொரப்பாடியில் ஏ. சி.எஸ்.கிரிக்கெட் போட்டி பரிசளிப்புவிழா !!
வேலூர் தொரப்பாடி தனியார் மண்டபத்தில் கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பாகாயம் சிஎம்சி விளையாட்டு மைதானத்தில் போட்டி நடந்தது. இதில் 34 அணிகள் விளையாடின. ஓட்டேரி வேலூர் லெவன்ஸ் அணி முதலிடமும், ஊசூர்பேட் பாய்ஸ் 2வது இடமும் பெற்றது.
இதற்கான பரிசளிப்பு தொரப்பாடி தனியார் மண்டபத்தில் நடந்தது. முதல் பரிசு ரூ 30,000, இரண்டாவது பரிசு ரூ 20,000 - பரிசை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். 34 அணிக்கும் கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டது. இதில் ஏ. சி.எஸ். கல்லூரிகளின் தலைவர் அருண்குமார், செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment