VELLOREHEADLINES : காட்பாடி கசம் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட கோ - கோ - விளையாட்டு போட்டி !!
வேலூர் மாவட்ட 17 - வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான கோ-கோ - விளையாட்டு போட்டி காட்பாடி கசம் கிங்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது !!
வேலூர் மாவட்டம் காட்பாடி கசத்தில் உள்ள கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான 17 - வயதுக்கு உட்பட்ட பள்ளி - மாணவ- மாணவிகளின் கோ - கோ - விளையாட்டு போட்டி நடந்தது. இதில் 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர்.
இறுதி போட்டியில் மாணவர் பிரிவில் குடியாத்தம் ஜோதி உயர்நிலைப் பள்ளி முதல் பரிசும், வேலூர் கொணவட்டம் கூனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2 - வது இடமும், மாணவியர் பிரிவில் கே.வி.குப்பம் அடுத்த தேவரிஷிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் பரிசும், சின்ன பள்ளிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி 2-வது இடமும் பிடித்தது.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அமெச்சூர் கோ-கோ - அசோ சேஸன் மாநில தலைவர் டாக்டர் எம். ஆர்.ரெட்டி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சங்கர் தலைமை தாங்கினர்.
கசம் எம் பி கே ஜி பண்ணை நிறுவனத் துணை தலைவர் ரெனி சார்லஸ், செயலாளர் பிரேமா டேவிஸ், பொருளாளர் பால் சந்திரசேகர், இயக்குநர் கிருபாகரன் டேனியல், கிங்ஸ் பள்ளி தாளாளர் டாக்டர் செல்வமணி, பள்ளி முதல்வர் பென்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கோ - கோ. அசோசேஸன் செயலாளர் ஸ்டான்லி வின்சென்ட்பால் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பரிசினை வழங்கினர். வேலூர் மாவட்ட அமெச்சூர் கோ-கோ - சங்கம் மற்றும் கசம் கிங்ஸ் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தியது. முடிவில் வேலூர் மாவட்ட கோ-கோ- சங்க பொருளாளர் ஏசுதாஸ் நன்றி கூறினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கசம் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் செய்து இருந்தது.
Comments
Post a Comment