VELLOREHEADLINES : திருவலம் அடுத்த குகையநெல்லூர் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் !!
ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு குகைய நெல்லூரில் கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய வேலூர் மாநகர மாவட்ட அதிமுக அவைத் தலைவர் எம்.ஆர்.ரெட்டி !!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த குகையநெல்லூர் புதிய காலனியில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு வேலூர் மாநகர மாவட்ட அதிமுக அவைத்தலைவர் எம். ஆர்.ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் அதிமுக மூத்த நிர்வாகி சந்திரபாபுக்கு உதவி தொகை ரூபாய் 5 ஆயிரத்தை எம். ஆர்.ரெட்டி வழங்கினார்.
உடன் ஒன்றிய துணைச் செயலாளர் கே.சி.வெங்கடேசன், கிளைச் செயலாளர் புரட்சி, காட்பாடி ஒன்றிய மாணவர் அணி இணைசெயலாளர் மகிமைதாஸ், மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment